சமூக வலைத்தளத்தில் இந்திய பெண்களின் திறமைக்கும் தைரியத்திற்கும் சான்றாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. கேரளாவை சேர்ந்த மணியம்மா என்ற 72 வயது பெண் ஒருவர் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை துபாயின் சாலைகளில் போட்டி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தி டிரைவர் அம்மா என்ற பெயரில் பிரபலமாகிய இவர் இன்ஸ்டாகிராமில் காடுகளை ஓட்டும் வீடியோக்கள் மூலம் அறிமுகமானவர். தற்போது துபாய் வீடியோவால் இந்திய அளவில் பேசப்பட்டு வருகின்றார். இவரின் திறமையை வியக்க வைக்கும் வகையில் அவரிடம் 11 வகையான டிரைவிங் லைசென்ஸ்கள் உள்ளது.
சொகுசு கார்களை மட்டுமல்லாமல் ரோடு ரோலர்கள், கிரேன்கள், பேருந்துகள், ஜேசிபி போன்ற கனராக வாகனங்களையும் எளிதில் ஓட்டக்கூடிய திறமை கொண்டவர். 1978 ஆம் ஆண்டு தன்னுடைய கணவரின் ஊக்கத்தால் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தொடங்கிய இவர் 2004 ஆம் ஆண்டு கணவர் மறைந்த பிறகு தனியாக அதனை நடத்தி வருகின்ற. கடந்த 20 வருடங்களாக கேரளாவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை வெற்றிகரமாக நடத்துவது மட்டுமல்லாமல் கனராக வாகனங்களை கற்றுத்தரும் பொறுப்பையும் செய்து வருகின்றார். இவருடைய இந்த தைரியம் பலருடைய பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
