வீட்டு பூட்டையே உடைக்காமல் பீரோவில் இருந்த ரூ.1.5 கோடி பணத்தை திருடிய திருடன்… வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

By Nanthini on ஆவணி 28, 2025

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொங்காலியூரை சேர்ந்த பிரியா என்பவர் தனது மகளுடன் வேல்முருகனின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பிரியா தன்னுடைய சொந்த நிலத்தை விற்று ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற நிலையில் அதில் 1.5 கோடி தொகையை வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். சம்பவத்தன்று பிரியா தனது மகளுடன் வெளியே சென்று விட்டார். பிறகு வீடு திரும்பிய போது பீரோவில் இருந்த ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது.

உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பூட்டை உடைக்காமல் சாவியை பயன்படுத்தி கொள்ளை நடத்தியதை சந்தேகத்தை போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டு உரிமையாளர் வேல்முருகன் மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து பணத்தை எடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பணத்தை பத்திரமாக பறிமுதல் செய்த உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.