திடீரென்று தீப்பிடித்த பள்ளி பேருந்து… சிக்கிக்கொண்ட 17 மாணவர்கள்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!

By Nanthini on ஆவணி 28, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் மீரட் ஜெயின்ட் பேட்ரிக் பள்ளி மாணவர்களை அழைத்து வீடு திரும்பி கொண்டிருந்த பேருந்தில் பிற்பகலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்தில் 17 மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருந்துள்ளனர். திடீரென்று பேருந்தில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்த ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரையும் வெளியேற்றி பெரும் விபத்தை தவிர்த்தார்.

உடனே தகவல் அறிந்து நிறைந்த தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மாணவர்களின் உயிரை காப்பாற்றிய ஓட்டுணரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் பள்ளி மாணவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகன பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வீடியோ உணர்த்துகிறது.