அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பாதையை மூடியது. இதனால் இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அமைச்சருடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தையின் பலனாக, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் மட்டும் இந்த வழியாகப் பயணிக்க ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக இந்த பாதையைக் கடந்துள்ளன. இதனால் இந்தியாவில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்வதாகவும், மீறினால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஜெய்சங்கரின் இந்த ராஜதந்திர நடவடிக்கை இந்தியாவிற்கு ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
