“இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும்” என்று கோரி இந்திய கால்பந்து வீரர்கள் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் உள்ளூர் கால்பந்தின் முக்கிய தொடரான இந்தியன் சூப்பர் லீக் (ISL), போதிய நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே தொடங்கவில்லை. இந்த ஆண்டு தொடரும் வந்துவிட்ட நிலையில், இந்திய கால்பந்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ISL players come together to speak against the AIFF and call on FIFA to step in to save Indian football#IndianFootball #SaveIndianFootball #ISL pic.twitter.com/a1zHJrk3cm
— Abdul Rahman Mashood (@abdulrahmanmash) January 2, 2026
இதனால் அதிருப்தியடைந்த இந்திய கால்பந்து வீரர்கள் ஒன்றிணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தற்போது ஜனவரி மாதம் என்பதால் இந்தியன் சூப்பர் லீக் (ISL) போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்க வேண்டிய நாங்கள், இன்று இந்திய கால்பந்து எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடி காரணமாக மிகுந்த விரக்தியுடன் ஒரு அவசர வேண்டுகோளை முன்வைக்கிறோம். அரசாங்கத்தால் கால்பந்து வாரியத்தின் பொறுப்புகளை இனி நிறைவேற்ற முடியாத சூழலில், ஒரு நிரந்தர முடக்கத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ள இந்திய கால்பந்து விளையாட்டைக் காப்பாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) உடனடியாகத் தலையிட வேண்டும். தயவுசெய்து அதைச் செய்ய எங்களுக்கு உதவுங்கள், இந்திய கால்பந்தை காப்பாற்றுங்கள்,
இந்த அழைப்பு அரசியல் காரணங்களுக்காக விடுக்கப்படவில்லை என்றும், விளையாட்டு மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட இறுதி முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், சூரிச்சில் உள்ள ஃபிஃபா தலைமையகம் தங்களுக்கு விரைவில் ஒரு தீர்வை வழங்கி மீண்டும் மைதானத்திற்குத் திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
