காலையிலேயே குட் நியூஸ்… பொங்கல் பரிசு தொகுப்பு… தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி…!

By Nanthini on தை 3, 2026

Spread the love

தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ரொக்க பணமும் வழங்கப்படும் நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை. இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரொக்க பணம் வழங்குவது குறித்து அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டு பொங்கல் பரிசாக 3,000 அல்லது 5,000 வழங்கப்படலாம் என்று பொதுமக்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.