டிவியில் பார்த்த பிரேக்கிங் நியூஸ்…. கதறியபடி ஓடிய பேரன்…! கனடாவில் இந்திய தம்பதிக்கு நேர்ந்த கொடூர முடிவு…! நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

By Devi Ramu on ஆடி 18, 2026

Spread the love

கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரில், முப்பதாண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வயதான தம்பதியினர் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, லாலி தூர் என்ற இந்திய வாலிபர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு குடியிருப்பில் நேர்ந்த தீ விபத்திலிருந்து தப்பிக்க முதியவர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த திடுக்கிடும் காட்சி நேரலையாக ஒளிபரப்பானது. அந்தப் பதறவைக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், தீப்பற்றி எரியும் அந்த வீடு தனது தாத்தா, பாட்டியினுடையது என்பதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு அலறியடித்தபடி ஓடியுள்ளார்.

அங்குச் சென்று பார்த்தபோது, அவரது தாத்தாவான மேஜர் சிங் பந்தல் (85) மற்றும் பாட்டி சுரிந்தர்ஜித் கவுர் பந்தல் (82) ஆகியோரின் வீடு முழுமையாகத் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில் 62 வயது நபர் ஓட்டிவந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது பலமாக மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாகும். அந்த மோதலின் தாக்கத்தால் அங்கிருந்த எரிவாயுக் குழாய் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், கட்டிடம் முழுவதும் தீ பரவி, அதிலிருந்து தப்பிக்க மேஜர் சிங் 3-வது மாடியிலிருந்து குதித்தும் பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவியின் உடல் மறுநாள் காலையில் மீட்கப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் கட்டிடத்தில் வசித்த மற்ற 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.