தமிழ் சினிமாவின் VFX-ஐ பார்த்து மிரளும் இந்திய சினிமா.. பெரிய சம்பவம் பண்ண காத்திருக்கும் சூர்யாவின் கங்குவா படம்..!!

By Priya Ram

Published on:

தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் VFX காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி VFX காட்சிகளை வைத்து இந்திய சினிமாவையே திருப்பி பார்க்க வைத்த தமிழ் படங்கள் பற்றி பார்ப்போம். முதலாவதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷா நடித்துள்ளார்.

   

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்தனர். பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த லியோ படத்தில் ஹைனா இடம்பெறும் VFX தரமானதாக இருந்தது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் உருவாகும் காங்குவா திரைப்படம் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் நடிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கங்குவா படத்தின் டீசரில் VFX காட்சிகள் மிரட்டலாக இருந்தது. படமும் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தங்கலான் டீசர் மக்களிடையே நல்ல வரவற்பை பெற்றது. படத்தின் VFX காட்சிகள் மிரட்டலாக உள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்தார். அயலான் படத்தில் இடம்பெற்ற VFX காட்சிகள் மக்களை கவரும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது.

author avatar
Priya Ram