அன்று தியேட்டரில் ஸ்நாக்ஸ் விற்ற நபர் இன்று மிகப்பெரிய பிசினஸ் மேன் ; யார் இந்த பாலாஜி ஸ்நாக்ஸ்

By Deepika

Published on:

 

ஒரு வெற்றிகரமான நபரோ அல்லது ஒரு வெற்றிகரமான பிராண்டோ அதன்பின் நிச்சயம் கடின உழைப்பும், ஒரு மிடில் கிளாஸ் குடும்பமும் இருந்திருக்கும். அப்படி வாடகை கூட கட்ட முடியாமல் வீட்டை காலி செய்த ஒரு சாதாரண குடும்பம் இன்றும் 5000 கோடிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். யார் இவர்கள் என இந்த பதிவில் காணலாம்.

   

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் தான் சந்துபாய் விரானி. குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பை கூட இவரால் தொடர முடியவில்லை. வேறு பத்தாவது வரை மட்டுமே படித்தார். குடும்ப சூழ்நிலை மோசமாக, சிறப்பான எதிர்காலத்தை ஆரம்பிக்க இவரின் குடும்பம் துண்டோராஜி என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.

Chandubhai virani as a canteen worker

சந்துபாய்க்கு இரண்டு சகோதர்கள் மேக்ஜிபாய், பிக்குபாய். இவர்கள் மூவரும் சேர்ந்து 20,000 முதலீடு செய்து விவாசாயம் சார்ந்த பொருட்களை வாங்கி விரக தொடங்கினார். ஆனால் போதுமான வருமானம் இல்லாததால் இரண்டு வருடங்களிலேயே அந்த தொழிலை கைவிட்டனர். உடனே வேறு தொழில் செய்ய முடியாமல், கிடைக்கும் சிறு சிறு தொழில்களை செய்ய தொடங்கினர்.

தியேட்டரில் உடைந்த சீட்டை மாற்றுவது, தியேட்டர் கேன்டீனில் வேலை செய்வது என இருந்து வந்தனர்.வருமானம் இல்லாமல் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், வாடகை வீட்டை காலி செய்யும் நிலைக்கு வந்தனர். இவர்கள் நன்றாக வேலை செய்ததால் தியேட்டர் தரப்பிலிருந்து மாதம் 1000 ரூபாய் இவர்களுக்கு வழங்கினார்.

Chandubhai virani

1982 ஆம் ஆண்டு ஒரு லட்சம் வங்கியில் இருந்து பெற்று தான் குடியிருந்த இடத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் மிஷனை வாங்கினார். இவரின் சிப்ஸ் நாளைடைவில் பிரபலமாக தொடங்கியது. 1992 ஆம் ஆண்டு ஐவரும் இவர் சகோதரர்களும் இதை பெரிய கம்பெனியாக விரிவுபடுத்தினார். இன்று இந்தியாவில் அதிக விற்கப்படும் ஸ்நாக்ஸ் இவருடையது தான். உலகம் முழுக்க பாலாஜி வேபார்ஸ் புகழ்பெற்றது.

Balaji wafers founder Chandubhai virani

இந்தியாவில் ஸ்நாக்ஸ் தயாரிப்பில் மூன்றாவது இடத்தில் இது உள்ளது. கடந்தஹ் வருடத்தின் மொத்த வருமானம் மட்டும் 5000 கோடி என தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 5000 பேர் இவரது பாக்டரியில் வேலை செய்கினறனர். அதில் பாதி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரத்துக்கு 3,400 கிலோ சிப்ஸ் இவர்கள் தயாரிக்கின்றனர். வாழ்வில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்பதற்கு உதாரணமாக சந்துபாய் இருக்கிறார்.

author avatar
Deepika