இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? சிக்கலில் இந்தியன் 3 திரைப்படம்… ஓகே சொன்ன ஷங்கர்… மனம் இறங்குவாரா கமல்…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on ஆவணி 22, 2025

Spread the love

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. இந்தியன் 3 படம் 80 சதவீதம் தயாராக உள்ளது. ஆனால் அந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாட்கள் இந்தியன் 3 திரைப்படத்திற்காக ஷூட்டிங் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால்தான் முழு படமும் தயாராகும்.

இதற்கு லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமும் ஷங்கரும் தயாராக உள்ளனர். ஆனால் கமல்ஹாசன் பிசியாக உள்ளார். ஒருபுறம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ரஜினி இணைந்து நடிக்கப் போகும் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம் ராஜ்ய சபா எம்பியாக கமல் பதவி ஏற்றுள்ளார். இப்படி பிஸியாக இருக்கும் நேரத்தில் அவரால் இந்தியன் 3 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

   

கமல் கால்ஷீட் ஒதுக்கவில்லை என்றால் இந்தியன் 3 படத்தை முடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும். இந்தியன் 2 திரைப்படம் தோல்வி அடைந்தாலும் இந்தியன் 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என காத்துக் கொண்டிருக்கும் சூழலில் கமல்ஹாசன் மனம் இறங்கி படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.