சிந்து நதி நீர் விவகாரத்தில் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ஆடி வரும் நாடகத்தை இந்தியா அதிரடியாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 62-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய இந்தியாவின் முதன்மைச் செயலாளர் அனுபமா சிங், பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகக் கொண்டுள்ள ஒரு நாட்டுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தொடர முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், 1960ஆம் ஆண்டு போடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்போதைய காலத்திற்கு ஒத்து வராத ஒன்று என்றும், அது முற்றிலும் “காலாவதியாகிவிட்டது” என்றும் இந்தியா சர்வதேச அரங்கில் சாடியுள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், அதே நேரத்தில் நட்புறவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நதிநீர் ஒப்பந்தத்தின் பலன்களை மட்டும் அனுபவிக்க நினைப்பது தர்க்கத்திற்கு எதிரானது என்று இந்தியா வாதிட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒரு ஒப்பந்தம் மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் தற்போதைய திடமான நிலைப்பாடாகும். பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வராது என்பதை இந்தியா உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் சோகமான சம்பவத்திற்குப் பிறகுதான், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிரடி முடிவை இந்தியா கையில் எடுத்துள்ளது. வழக்கம்போல இரு நாடுகளுக்கும் இடையேயான தற்காலிக மோதல் முடிந்தவுடன் இந்த ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று கணக்குப்போட்ட பாகிஸ்தானுக்கு, இம்முறை இந்தியாவின் கடுமையான நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், பாகிஸ்தானின் மொத்த தண்ணீர் நுகர்வில் 93 சதவீதம் இந்த சிந்து நதி அமைப்பிலிருந்தே கிடைக்கிறது. அதுமட்டுமன்றி, அந்நாட்டின் 16 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில் 80 சதவீதம் இந்த நீரையே நம்பியுள்ளது. எனவே, இந்தியாவின் இந்த அதிரடி முடிவு பாகிஸ்தானின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத் துறையை முற்றிலுமாக நிலைகுலையச் செய்யும் வல்லமை கொண்டது.
பாகிஸ்தானை ஒரு “பிராங்கண்ஸ்டைன்” (தான் உருவாக்கிய அரக்கனாலேயே அழியும் பாத்திரம்) நாடு என்று விமர்சித்த அனுபமா சிங், தானே வளர்த்த பயங்கரவாதம் தன்னையே தாக்கும்போது பாகிஸ்தான் அதிர்ச்சியடைவது வேடிக்கையாக உள்ளது என்றார். மேலும், ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் எழுப்பிய புகார்களை முற்றிலுமாக நிராகரித்த அவர், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை மீட்பது மட்டுமே இனி எஞ்சியிருக்கும் ஒரே பிரச்சனை என்றும் உறுதிபடத் தெரிவித்து பாகிஸ்தானின் வாயை அடைத்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…