நீங்க பார்ட் டைம் வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை படிங்க.. எச்சரிக்கை அறிவிப்பு..!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் பகுதிநேர வேலை என்ற பெயரில் whatsapp மூலமாக பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர வேலை என்ற பெயரில் look என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் 20 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை முன் பணம் ஆக செலுத்த வேண்டும். அதன் பிறகு தினமும் அந்த செயலியில் வரும் நாவல் மற்றும் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தினமும் 700 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறி ஆரம்பத்தில் சிறிய தொகையை லாபமாக வழங்கிய நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். பிறகு மற்றவர்களை இணைப்பதன் மூலம் லாபம் பெறலாம் என்றும் கொடுத்த பணத்தில் பாதி தொகையை ஒரு வாரத்தில் திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்றோம் யுக்திகளை பயன்படுத்தி பொதுமக்கள் பலரும் ஏமாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு இணையதள மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் செயலிகளில் முதலீடு செய்யும் முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் ஏமாற்றப்பட்டிருந்தால் உடனடியாக இலவச சைபர் குற்றத் தொலைபேசி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“நீங்களே இப்படி பண்ணலாமா…?” பதறிய பயிற்சி பெண் டாக்டர்… அத்துமீறி சிக்கிய மருத்துவர்… பரபரப்பு சம்பவம்…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…

11 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… காதல் குறைந்ததால் விபரீதம்?… பச்சிளம் குழந்தையைக் கொன்று… தம்பதி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்..!

ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…

11 minutes ago

குடிமகன்களுக்கு ஷாக்… பண்டிகை நாள்களில் டாஸ்மாக் மூடல்… அரசாணை வருகிறதா?…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்…

16 minutes ago

தம்பிங்களா சண்டை போடாதீங்க… வீட்டுக்குப் போங்க… சண்டையை நிறுத்த போனவருக்கு… வாளுடன் ஓடிவந்து கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி வீடியோ…!!

அகமதாபாத் கோமதிபூர் பகுதியில் நவம்பர் 10-ஆம் தேதி இரவு சிறுவர்களுக்கு இடையிலான சண்டையைத் தடுக்க முயன்ற ஒருவர் மீது கொடூரமான…

25 minutes ago

கடவுளே… இது கல்யாண மாப்பிள்ளையா?… இல்ல கேங்ஸ்டரா?… கூட்டத்திற்கு நடுவே துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்த மணமகன்… வைரல் வீடியோவால் பாய்ந்த போலீஸ்…!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது மணமகன் ஒருவர் ரதத்தில் அமர்ந்தபடி மகிழ்ச்சியுடன் துப்பாக்கியால் வானத்தை…

41 minutes ago