நீங்க பார்ட் டைம் வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை படிங்க.. எச்சரிக்கை அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் பகுதிநேர வேலை என்ற பெயரில் whatsapp மூலமாக பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர வேலை என்ற பெயரில் look என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் 20 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை முன் பணம் ஆக செலுத்த வேண்டும். அதன் பிறகு தினமும் அந்த செயலியில் வரும் நாவல் மற்றும் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தினமும் 700 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறி ஆரம்பத்தில் சிறிய தொகையை லாபமாக வழங்கிய நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். பிறகு மற்றவர்களை இணைப்பதன் மூலம் லாபம் பெறலாம் என்றும் கொடுத்த பணத்தில் பாதி தொகையை ஒரு வாரத்தில் திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என்றோம் யுக்திகளை பயன்படுத்தி பொதுமக்கள் பலரும் ஏமாற்றப்பட்டுள்ளன.

   

இவ்வாறு இணையதள மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் செயலிகளில் முதலீடு செய்யும் முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் ஏமாற்றப்பட்டிருந்தால் உடனடியாக இலவச சைபர் குற்றத் தொலைபேசி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.