24 கேரட் தங்​கத்​தால் ஜொலிக்கும் வீடு… வீட்டின் உரிமையாளர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா..? அட நம்பவே முடியலையே..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

Youtube சரஸ்வத் பெங்களூர்வை சேர்ந்தவர். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதுமையான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீட்டின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது தற்போது செம வைரலாகி வருகிறது. அதாவது மின்சார ஸ்விட்ச்  முதல் வாஷ் பேஷன் வரை அனைத்து பொருட்களுமே 24 கேரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகளும் தங்கத்தால் உள்ளது. மேலும் ஆங்காங்கே தங்கத்தால் செதுக்கப்பட்ட சிலைகளும், நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டன. இது குறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில், “எங்களுடைய குடும்பத்தில் மொத்தம் 25 பேர் இருக்கிறோம். முதலில் ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினோம். அதன்பிறகு அரிசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று சாலை, கட்டிடங்களை கட்டினோம். தற்போது பிரமாண்ட ஹோட்டலை கட்டி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.