பொதுவாகவே பலருடைய வீடுகளில் எலி தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் போன்றவற்றின் வயிறுகளை கடித்து சேதப்படுத்துவதுடன் உணவுப் பொருட்களும் எலிகளால் பாதிக்கப்படுகிறது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்படுவதற்கு அதிகமான சாத்திய கூறுகள் உள்ளது. இதனை தடுப்பதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அதாவது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு கோதுமை மாவு எடுத்து அதில் தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், தலைக்கே குளிக்க பயன்படும் ஷாம்பு சிறிதளவு, நான்கு அல்லது ஐந்து வேர்க்கடலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இறுதியாக சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வந்து அந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்து வீட்டில் எலி இருக்கும் இடங்களில் வைக்கலாம். இதனை எலிகள் சாப்பிடுவதால் அவற்றுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். இதனால் வீட்டில் இருக்கும் எலிகள் வெளியே சென்று விடும். அதனைப் போலவே பூண்டு அல்லது வெங்காயம் போன்ற கடுமையான வாசனை கொண்ட பொருட்களின் தோள்களை எலிகள் அடிக்கடி வரும் இடங்களில் போட்டு வைத்தால் எலிகள் வருவதை தடுக்க முடியும். இதன் வாசனை இலைகளுக்கு பிடிக்காது என்பதால் அந்த இடத்தை விட்டு தள்ளி போய்விடும்.
வீட்டில் உள்ள எலிகளை விரட்ட பேக்கிங் சோடா சிறந்ததாக இருக்கும். எலிகள் வரும் இடத்தில் பேக்கிங் சோடாவை தூவுவதன் மூலம் எலிகளை எளிதாக விரட்டி விடலாம். அதனைப் போலவே பேக்கிங் சோடாவை அரிசி மாவில் கலந்து எலிகள் அதிகம் வரும் இடங்களில் போட்டால் எலிகளை விரட்ட முடியும்.
மிளகாய் விதைகளை சமையலறையின் மூலைகள் மற்றும் வீடுகளின் மூளைகளில் தூவி விட்டால் எலிகள் வீட்டிற்குள் நுழையாது.
கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றின் வாசனையும் எலிகளுக்கு பிடிக்காது என்பதால் இதனை பொடி செய்து எலிகள் வரும் இடங்களில் தூவி விட்டால் அந்த வாசனைக்கு எலிகள் உங்க வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்காது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…