Categories: சினிமா

இந்த விஷயத்துல மாரி செல்வராஜ்க்கு இருக்கிற தைரியம் எனக்கு சுத்தமா இல்ல… உருக்கமாக பேசிய பா ரஞ்சித்…

Spread the love

சென்னை ஆவடியில் பிறந்து வளர்ந்தவர் பா ரஞ்சித். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இயக்குனர் சிவ சண்முகத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் சென்னை 600028 திரைப்படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பா ரஞ்சித்.

2012 ஆம் ஆண்டு மிகவும் சிறிய பட்ஜெட்டை கொண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அட்டகத்தி படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. பின்னர் 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார் பா ரஞ்சித். இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கபாலி மற்றும் காலா திரைப்படத்தை இயக்கினார். 2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார் ரஞ்சித். சார்பட்டா பரம்பரை திரைப்படம் முற்றிலும் வேறுபட்ட கதைக்களமாக இருந்தது. அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு நட்சத்திரம் நகர்கிறது தற்போது தங்கலான் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் நீலம் ப்ரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவர் தயாரித்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். பின்னர் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பொம்மைநாயகி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பா ரஞ்சித் மாரி செல்வராஜை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், வாழை திரைப்படத்தில் சின்ன வயசுல பட்ட கஷ்டங்களை எல்லாத்தையும் ஒரு திரை காவியமா அற்புத படைப்பா உருவாக்கி இருக்காரு மாரி செல்வராஜ். அதே மாதிரி சின்ன வயசுல நான் பட்ட கஷ்டங்களை இந்த மாதிரி ஒரு படைப்பா உருவாக்குற தைரியம் என்கிட்ட சுத்தமா இல்ல. அந்த விஷயத்தில் மாரி செல்வராஜ் தைரியமான ஆளு தான் என்று கூறியிருக்கிறார் பா ரஞ்சித்.

admin

Recent Posts

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

12 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

21 minutes ago

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

30 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

32 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

39 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

42 minutes ago