அடுத்த பரபரப்பு… தவெகவில் இணைய நாள் குறித்த விஜய் பாஸ்கர்… தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்…!

Spread the love

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தித்த தொடர் தேர்தல் தோல்விகள், அக்கட்சியின் உள்ளே மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளன. சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இதன் விளைவாக, எஸ்பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் போன்ற மூத்த தலைவர்கள் இபிஎஸ்-க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இந்த உள்கட்சிப் பூசல், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிப்படையாக வெடித்தது; இபிஎஸ் தரப்பு எதிர்த்து வாக்களித்த நிலையில், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்புக்கு ஆதரவளித்த அதிருப்தியாளர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்பட்டன. இதற்கிடையே, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். பின்னர், அதிருப்தி அணியில் இருந்த ஒரு தரப்பினர் இபிஎஸ்-உடன் சமரசம் செய்து கொண்டு மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகினர். இருப்பினும், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் அதிமுக பக்கம் செல்லாமல், தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு மௌனம் காத்து வந்தனர்.

அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மௌனத்தை உடைக்கும் வகையில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை கடந்த 16-ஆம் தேதி விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை அவர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். வரும் ஜூன் 29-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில், சி. விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் அவரே மீண்டும் வேட்பாளராகக் களம் இறங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன

Visaka

Recent Posts

பல லட்சம் மோசடியா?… இனிப்பு கடைகளில் QR கோடு மாற்றம்… நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்… கடைக்காரர்களுக்கு அதிர்ச்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…

14 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… ஓடும் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது… பெண்ணை அமர வைத்து வாலிபர் செய்த பகீர் காரியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…

25 minutes ago

அம்பலமான கள்ளத்தொடர்பு… மிரட்டிய சிறுவன்… மாயமான மர்மம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… கடைசியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…

25 minutes ago

திக்.. திக்..! கதவை திறந்தது தான் தப்பா?… புகாரளித்தும் அடங்காத ஆக்ரோஷம்… பழிவாங்க துடித்த கும்பல்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…

35 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுஷி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தாய்… பெங்களூருவை உலுக்கிய திக் திக் சம்பவம்…!!

பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…

36 minutes ago

“காசு தர்றியா, சாவடிச்சிடவா?!”… அடுத்தடுத்து விழுந்த அடிகள்… துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்… கோயிலில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…

50 minutes ago