சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லாதிருந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக விலை சரிந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹70 குறைந்து ₹13,300-க்கும், அதன் தொடர்ச்சியாக ஒரு சவரன் தங்கம் ₹560 என்ற கணிசமான அளவில் குறைந்து ₹1,06,400-க்கும் விற்பனையாகி வருகிறது; அதேவேளையில், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ₹245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹2,45,000-க்கும் நிலையான விலையில் வர்த்தகமாகிறது.
