மாணவர்களே அலர்ட்… நீட் ரிசல்ட்க்காக காக்க வேண்டாம்… தமிழக அரசின் அதிரடி முடிவு…!

By Visaka on ஆனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்று முதல் முறைப்படி தொடங்குகிறது. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தகுதியுள்ள மாணவர்கள் இன்று பகல் 12:00 மணி முதல் www.tnmedicalselection.org அல்லது www.tnmedicalselection.net ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே இந்த சேர்க்கை செயல்முறைகள் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு முன்னதாகவே விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.