தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் , தளபதி விஜய் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்தது. ஆனாலும் அனைத்து பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் ரிலீசான முதல் நாளே உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்து புது உச்சத்தை எட்டியது.
இதைத்தொடர்ந்து 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. தற்பொழுது வரை திரையரங்குகள் கூட்டமாக தான் இருக்கின்றன. வசூலில் சக்க போடு போட்டு வரும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று ரசித்து வருகின்றனர்.
லியோ படத்தில் Hyena காட்சி தத்ரூபமாக VFXல் உருவாக்கப்பட்டு இருந்ததை படம் பார்த்த ரசிகர்கள் எல்லோரும் பாராட்டி இருந்தனர். அந்த காட்சியை உருவாக்க மொத்தம் 15 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது படக்குழு என்கிற பகீர் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…