1800-களின் பிற்பகுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும் எகிப்தில் உள்ள ‘தீப்ஸ்’ பகுதி மன்னர்களின் கல்லறைகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியபோது, முத்திரையிடப்பட்ட பானைகளில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கண்டெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும் அந்தத் தேன் சிறிதும் கெட்டுப்போகாமல், அப்படியே உண்ணும் பக்குவத்திலேயே இருந்தது உலகறிவிஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பண்டைய எகிப்திய அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் மறுவாழ்வுக்காக உணவுப் பொருட்களைப் புதைப்பது வழக்கம்; அந்த வகையில் தேனை அவர்கள் வெறும் உணவாக மட்டுமல்லாமல், மருத்துவத்திற்கும் வழிபாட்டிற்கும் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தினர்.
பெரும்பாலான உணவுப் பொருட்கள் சில நாட்களிலேயே அழுகிவிடும் நிலையில், தேன் மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் தனித்துவமான வேதியியல் அமைப்பே முக்கியக் காரணமாகும். தேனில் மிகக் குறைந்த அளவிலான நீர்ச்சத்தும், அதிகப்படியான சர்க்கரையும் இருப்பதால் அங்கு பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகளால் உயிர்வாழ முடியாது. மேலும், தேனீக்கள் தேனைச் சேகரிக்கும்போது தங்கள் இறக்கைகளால் நீரை ஆவியாக்குவதோடு, அவற்றின் உடலில் உள்ள என்சைம் மூலம் இயற்கையான கிருமி நாசினியான ‘ஹைட்ரஜன் பெராக்சைடு’ ஐ உருவாக்குகின்றன.
இயற்கையாகவே குறைந்த பி.எச் அமிலத்தன்மை கொண்ட இந்த அமைப்பால், நுண்கிருமிகள் எங்குமே உள்ளே நுழைய முடியாது. இதனால் காலப்போக்கில் தேன் சற்று இறுகி அதன் வடிவம் மாறலாமே தவிர, அது எக்காலத்திலும் அழுகிப்போவதில்லை. எகிப்து மன்னர்களின் கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட இந்த ‘லிக்விட் தங்கம்’ எனப்படும் தேன், இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…
மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…