சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த 15 வயது பிளஸ்-1 மாணவி, கடந்த 2025 நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது உறவினரான 25 வயது மோகன் என்பவர் கைபேசிக்கு சார்ஜ் போடுவதாக கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அச்சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, இச்சம்பவத்தை வெளியில்கூறினால் அவமானம் ஏற்படும் எனப் பயமுறுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார்.
சமீபத்தில் சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது தாயார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் மாணவி 9 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சங்ககிரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி…
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…