அடேங்கப்பா.. இதுவரை தமிழ்நாட்டில் எந்த மலையாள படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்திய ‘மஞ்சுமல் பாய்ஸ்’..

By Ranjith Kumar on மார்ச் 3, 2024

Spread the love

மலையாளத்தில் முதல்முறையாக இதுவரை எந்த படமும் பண்ணாத தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரேக்கிங் ரெக்கார்டு பண்ணி உள்ளது தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மலையாள படம் வாங்காத வசூலை இப்படம் வாங்கியுள்ளது “மஞ்சுமல் பாய்ஸ்” படம் மலையாளத்தில் எடுத்த நாள் இவ்வளவு கோடியில் எடுக்கப்பட்டது, இதுவே தமிழில் வேற இயக்குனர் இயக்கியிருந்தால் 100 கோடிக்கும் மேல் படத்தின் பட்ஜெட்டை செலவாகி இருக்கும் என்று மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் கூறியுள்ளார்.

“மஞ்சுமல் பாய்ஸ்” என்ற மலையாள படம் மலையாளத்தில் தாண்டி பல இடங்களில் வெற்றித் கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வசூலை இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகை இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம் தான் இது.

   

இப்படத்தில் கேரளாவில் உள்ள மஞ்சுமல் என்ற இடத்தில் இருந்து 11 நண்பர்கள் கூடி கொடைக்கானலில் சுற்றுலா வந்துள்ளார்கள். அங்குத் தெரியாமல் 11 நண்பர்கள் ஒருவர் குணா குகைக்குள் விழுந்து விடுகிறார், மீதி உள்ள 10 நண்பர்கள் இவர் ஒருவரை காப்பாற்றுவதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் 60% மேலாக தமிழ் மொழியில் இயக்கப்பட்டு முக்கியமாக கொடைக்கானலில் எடுக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் மிக பிரபலமாக தமிழில் வரவேற்கத்தக்க காரணம் இதான்.

   

#image_title

 

இதுவரை மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியான படங்களில் ஒரு படம் கூட இப்ப படத்தின் வசூலை தொட்டதே இல்லை, இப்படம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளி மலையாள சினிமாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இப்படம் இன்னமும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இன்னும் இரு வாரத்திற்குள் 100 கோடி கிளப்பில் இணையும் என்று தெரிகிறது.