தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. குறிகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கை விட்டு சற்று விலகி இருந்த நடிகை சினேகா தற்பொழுது ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்கிற துணிக்கடை ஒன்றையும் திறந்துள்ளார். இவரைப்போலவே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதை தொடர்ந்து மலையாளம், தமிழ் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 2014ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே திரைப்படம் மூலம் திரையுலகில் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் நடிகை சினேகாவின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் அவர், ‘நான் ஒரு தடவை போட்ட ட்ரேஸ்ஸ இன்னொரு தடவை போட மாட்டேன் என்றும், என்னோட கப் போர்டு பெருசாகி கிட்டே போகுது’ என்றும் கூறியுள்ளார். இதனுடன் நடிகை அபிராமி பேசிய வீடியோ ஒன்றையும் இணைத்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகை அபிராமி ‘என்கிட்டே வெறும் 11 புடவை மட்டும் தான் இருக்கு’ என்று கூறியுள்ளார். இதை இரண்டையும் ஒன்றாக இணைத்து ரசிகர்கள் சினேகாவை ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…