govt

தனக்குதானே சிகிச்சை செய்த வாலிபர்… சீர்காழி மருத்துவமனையில் நடந்த அவலம்…

By admin on கார்த்திகை 13, 2024

Spread the love

அரசாங்கம் மக்களுக்காக தான் செயல்படுகிறது. மக்களின் நலனுக்காக தான் பல திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அது போல தான் அரசு மருத்துவமனைகள். எல்லாராலும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல இயலாது. ஏனென்றால் இங்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அதிகபடியாக இருக்கிறார்கள்.

   

பத்தாததற்கு வேலை வாய்ப்பு இல்லாத பிரச்சனையும் கூடவே இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் கிடைத்த வேலையை கூலி வேலையை பார்க்கும் மக்களுக்கு எந்த ஒரு உடல் பிரச்சினை என்றாலும் செல்லக்கூடிய ஒரே இடம் அரசு மருத்துவமனையாக தான் இருக்கிறது. ஆனால் இந்த அரசு மருத்துவமனைகளில் எல்லாம் சரியாக செயல்படுகிறதா என்றால் வேதனையுடன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   

அரசாங்கம் எல்லாவிதமான வசதிகளையும் மக்களுக்கு அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தினாலும் தலைமையகத்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கும் வந்து அவர்களால் பார்க்க முடியாது. ஒரு சில இடங்களில் தவறு நடக்கிறது. இந்த தவறை சரி செய்ய வேண்டியது அந்தந்த பொறுப்பில் இருக்கும் நபர்கள்தான். அதேபோலத்தான் ஒரு சம்பவம் சீர்காழியில் நடந்திருக்கிறது.

 

சீர்காழி அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு வந்த ஒரு இளைஞர் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அவரே தன் கையால் மருந்து போட்டு சிகிச்சை செய்கிறார். இது பார்ப்பதற்கு மிகவும் அவலமாக இருக்கிறது. இதை ஒரு நபர் வீடியோ எடுத்து பகிர்ந்திருக்கிறார். இது இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அரசாங்கம் எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்று கமெண்ட்ஸ்களில் மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.