லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2016 ஆம் ஆண்டு குறும்படம் இயக்கியதன் மூலம் தனது கேரியரை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ்.

2019 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று லோகேஷ் கனகராஜ் பிரபலமானார். அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் வெற்றி பெறவே முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக ஆனார் லோகேஷ் கனகராஜ்.
அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு கமலஹாசன் வைத்து விக்ரம் 2023 ஆம் ஆண்டு லீயோ ஆகிய படங்களை இயக்கி புகழ்பெற்றார். தற்போது அடுத்ததாக கைதி 2 விக்ரம் 2 என பல படங்களை கைவசம் வைத்து பிசியாக இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் 10 படங்களை இயக்கிவிட்டு சினிமாவை விட்டு சென்று விடுவேன் என்று ஒரு மேடையில் கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இதை பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் 10 படங்களை இயக்கிவிட்டு புதிதாக வருபவர்களுக்கு வழிவிட்டு சினிமா விட்டு போக வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். எனக்கு பிடித்த சில டைரக்டர்கள் இது பற்றி திரும்பத் திரும்ப போறேன்னு பேசாதே அப்படின்னு சொன்னதுனால நான் பேசாம அமைதியா இருக்கேன். ஆனா என்னோட டெசிஷன் அதுதான் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
