உலகில் விதவிதமாக பல வகையான உணவுகள் இருக்கிறது. முந்தைய காலங்கள் போல் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து விதமான உணவுகளையும் நம்மால் சாப்பிட்டு ருசி பார்க்க இயலும். குறைந்த விலையில் இருந்து அதிகபட்சமான விலையில் வரை உணவுகள் இருக்கிறது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை இந்தியாவை பொருத்தமட்டில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தங்கத்தினால் செய்த உணவை துபாயில் விற்பனை செய்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இனி காண்போம்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் துபாயில் டி ஐ எஃப் சியின் எமிரேட்ஸ் பைனான்சியல் டவரில் அமைந்திருக்கிறது போகோ கபே. இந்த போகோ கஃபையில் தான் தங்கத்திலான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தங்க இலைகளை வைத்து சுத்தமான வெள்ளிக்கோப்பையில் தரப்படும் டீயின் விலை ஒரு லட்சம் ரூபாய் ஆகும். ரூபாய் 50 100 இல் டீ சாப்பிட்டிருப்போம். பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கே சென்றாலும் 500 700 ரூபாய்க்கு தான் டீ கொடுப்பார்கள். ஆனால் ஒரு லட்ச ரூபாய்க்கு டீ இங்கு விற்பனையாவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
டீ மட்டுமல்ல இங்கு சுத்தமான தங்கம் துவக்கப்பட்ட கிராய்சென்ட்டுகள் தங்க தண்ணீர் தங்க பர்கர் மற்றும் தங்க ஐஸ்கிரீம்களும் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இதன் விலையை கேட்டால் நமக்கே தலை சுற்றி விடும் போல இருக்கும். ஒரு வித்தியாசமான அனுபவத்திற்காக இதையும் மக்கள் வாங்க தான் செய்கிறார்கள்.
இந்த ஹோட்டலில் உரிமையாளரான சுதேஷா சர்மா கூறுகையில் அனைத்து மக்களுக்கும் உணவளிக்கும் வேளையில் தேர்வு செய்து உணவை ரசித்து வித்தியாசமான அனுபவத்துடன் சாப்பிட வருபவர்களுக்கு தனித்துவமான உணவுகளை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினோம். அப்படி உருவானது தான் தங்கத்தால் ஆன உணவுப் பொருட்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலை உணவில் இருந்தே அதிக விலை வரைக்கும் இருக்கும் எந்த மெனுவையும் அவர்களால் தேர்வு செய்து சாப்பிட முடியும் என்று கூறுகிறார்.
துபாயில் உணவு ரிவ்யூ செய்யும் ஒருவர் இந்த தங்கத்தால் ஆன ஒரு லட்ச ரூபாய் டீ பற்றி வீடியோவை போட்டிருக்கிறார். அந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலதரப்பட்ட விமர்சனங்களை செய்து வருகின்றனர். அதில் வேடிக்கையான விமர்சனங்களும் இடம் பெற்று இருக்கிறது. டீயை குடிப்பதற்கு ஈஎம்ஐ செலுத்தி தான் குடிக்க வேண்டும் போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.