பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ரக்ஷித் செட்டிக்கு ஜோடியாக நடித்தார். முதல் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் ராஷ்மிகா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விஜய் தேவர கொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வரும்.
ஆனால் நாங்கள் காதலிக்கவில்லை என இருவரும் கூறி வருகின்றனர். ஆனால் புஷ்பா -2 ஆடியோ லாஞ்சில் இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டது. தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஹிந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், டான்ஸ் ஆடும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவார். அந்தவகையில் தற்போது பச்சை நிறத்தில் சேலை உடுத்தி கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.