நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2001-ஆம் ஆண்டு ரிலீசான சந்தோசம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு ஜெயம் ரவியுடன் மழை, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், விஜய்யின் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் ஸ்ரேயா நடித்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் ஸ்ரேயாவுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, சிக்கு புக்கு உள்ளிட்ட படங்களிலும் ஸ்ரேயா சரண் ஹீரோயினாக நடித்தார். ஸ்ரேயா சரணுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் ஸ்ரேயா சரண் நடித்துள்ளார். மேலும் இவர் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடனமாடியிருப்பார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் நடிகை ஸ்ரேயா
அதாவது சுமார் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவின் 44 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இதை நடிகை ஸ்ரேயா பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில், நான் நடிகர் சூர்யாவின் 44 – வது படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளேன். அந்த பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது. விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.