புத்தாண்டு என்றாலே புதிய தொடக்கங்கள் தான். 2024 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் இருக்கின்றது. புத்தாண்டு தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே இருக்கிறது. இந்த புத்தாண்டில் நீங்கள் புது போன் வாங்கலாம் என்று நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு தான் இந்த நற்செய்தி. வருகிற டிசம்பர் மாதத்தில் பல பிராண்டுகளில் சிறப்பம்சங்கள் பொருந்திய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு சந்தைக்கு வருகின்றன. எந்தெந்த ஃபோன்கள் விற்பனைக்கு வருகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
1. iQOO 13
இந்த டிசம்பர் மாதத்தில் ஐ க்யூ 13 போன் அறிமுகமாக இருக்கிறது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ஐ க்யூ 12 போனில் இருந்து ஸ்னாப்டகன் 83 சிப்சட்டை விட 31% வேகமாக இயங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த போனில் வரக்கூடிய மொபைல் கேமராவில் வெளிப்புறத்தில் வட்ட வடிவில் எல்இடி லைட் டிசைனில் வருகிறது. இது புகைப்படம் எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் கூடுதல் ஒளியை அளிக்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
2. Oneplus 13
அடுத்ததாக இந்த டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் அடுத்த ஒரு ஸ்மார்ட் போன் ஒன் பிளஸ் 13. டிசம்பரில் இந்த போன் சீனாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது இருப்பினும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்த போன் வெளிவந்து விடும். இதில் 6000 mAh பேட்டரி ஸ்னாப்டிராகன் எயிட் எலைட் சிப்செட் என நவீன தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட் போன் வெளிவர இருக்கிறது என்று கூறப்படுகிறது.
3. Redmi Note 14 Series
அடுத்ததாக இந்த டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் அடுத்த ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 14 சீரிஸ். கடந்த செப்டம்பர் மாதமே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகிவிட்டது. இந்தியாவில் தான் டிசம்பரில் அறிமுகமாகிறது. 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே 120hz Refresh Rate 3000 நிட்ஸ் வரை பிரகாசமாக இருக்கக்கூடிய சிறப்பம்சங்களுடன் இந்த போன் வெளிவர இருக்கிறது.
4. Xiaomi 15 Series
அடுத்ததாக வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன் சியோமி 15 சீரிஸ். சீனாவில் இது டிசம்பரில் வெளியாகிறது 2025 தொடக்கத்தில் உலகம் முழுவதும் அறிமுகமாகிறது. இதிலும் snapdragon சிப்செட் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5. Realme Narzo 70 Curve
அடுத்ததாக இந்த டிசம்பரில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன் realme narzo 70 curve. இதில் மீடியா டெக் டைமன்சிட்டி சிப்செட் 6.67 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பல சிறப்பம்சங்களுடன் வருகிறது. இதன் டிசைன் மற்றும் ஸ்டைல் ஆகியவை இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் கவர்ச்சிகரமாக வருகிறது.