என்னையே கடிக்கிறியா…? கோபத்தில் பாம்பை டாப்பாவில் அடைத்து எடுத்து வந்த முதியவர்…. ஹாஸ்பிடலில் ஷாக்கான டாக்டர்கள்…. திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 15, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் தன்னைத் தீண்டிய விஷப் பாம்பைக் கோபத்துடன் பிடித்து பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு முதியவர் ஒருவர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வியப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான முராரி என்ற முதியவரை விஷ நாகப்பாம்பு ஒன்று திடீரெனக் கடித்துள்ளது.

பாம்பு கடித்த வேதனையைவிட, தன்னைத் தீண்டிய அந்தப் பாம்பின் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில், துணிச்சலாகச் செயல்பட்ட அந்த முதியவர் அந்தப் பாம்பை உடனடியாகத் தன் கைகளால் பிடித்து ஒரு பெட்டிக்குள் அடைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் அதே பெட்டியுடன் மருத்துவமனைக்கு அவர் நடந்து வந்ததைக் கண்டு அங்கிருந்த மருத்துவர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது மருத்துவமனையில் முதியவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் பிடித்து வந்த பாம்பு பெட்டிக்குள் பத்திரமாக இருப்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.