நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் கடந்த பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், சிறுமி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “நானும் உங்கள் ரசிகைதானே, உங்கள் திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த மழலை மாறாத கேள்வி இணையதளங்களில் வேகமாகப் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்தது.
A post shared by urs lucky thalli 😍 (@urs_luckythalli)
“>
இந்த வீடியோவை கவனித்த விஜய் தேவரகொண்டா, அந்த சிறுமிக்கு மிகவும் கனிவான முறையில் பதிலளித்து அனைவரது இதயங்களையும் வென்றுள்ளார். தனது பதிலில், அந்த சிறுமியைத் தனது வீட்டிற்கு மதிய உணவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததோடு, அவருக்குப் பிடித்த இனிப்புகள் மற்றும் உணவுகள் என்ன என்பதைத் தெரிவித்தால் அவற்றை ஒன்றாகச் சேர்ந்து ரசிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது திருமண மகிழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, பல்வேறு நகரங்களில் இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் செய்தும் விஜய்-ராஷ்மிகா ஜோடி தங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…