இரண்டு ஆண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்.. ஊர் நடுவே கட்டி வைத்து அடித்து உதைத்த மக்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

ஒடிசா மாநிலத்தில் காஷிபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு ஆண்களுடன் ஜாஷிபூர் வார சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். சந்தையிலிருந்து வீடு திரும்பிய பெண்ணை உறவினர்கள் பார்த்து அந்த ஆண்களில் ஒருவரோடு இந்த பெண்ணிற்கு தகாத உறவு இருப்பதாக கூறி உள்ளனர். தகராறு ஏற்பட்டதில் பொதுமக்கள் அனைவருமே ஒன்று கூடினர்.

அவர்கள் மூன்று பேரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலின் பெயரில் வந்த போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அந்தப் பெண்ணின் மாமியாருக்கு நெருங்கிய சகோதரன் போன்ற முறையாம். அந்தப் பெண்ணிற்கு தந்தை வழி மாமாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கள்ளத்தொடர்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.