உத்தரப்பிரதேச மாநிலத்தில் யானையை காணவில்லை என்று ஒருவர் புகார் அளித்துள்ளார். வடிவேலு படத்தில் கிணற்றைக் காணோம் என்பது போல வினோதமாக உள்ளது. மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா, ஜாக்பாட் பகுதியில் யானை மற்றும் பாவனை காணவில்லை என்றும் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளார். யானையின் உரிமையான எண்ணையும் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிகாரி கூறியது பலமுவில் உணவு பற்றாக்குறை உள்ளதால் யானையின் உரிமையாளர் ராஞ்சிக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும், அதற்காக மர்சாபூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது. பழமுவில் யானையை பாகனிடம் ஒப்படைத்த பின்னர் இருவருமே மாயமானார்கள் என வனசரக அதிகாரி இந்த விபரத்தை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
