“என் மாமியார்கிட்டயே வம்பா?”… தட்டிக்கேட்ட வருங்கால மருமகன்… ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கள்ளக்காதலன்… சென்னையில் பகீர்…!!

Spread the love

சென்னை திரு.வி.க. நகரில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கும், சேட்டு என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. சமீபத்தில் விமலா அவரைப் புறக்கணித்துப் பேசாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, இரவு நேரத்தில் குடிபோதையில் விமலாவின் வீட்டிற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த விமலாவின் மகளை மணக்கவுள்ள மோனிஷ் என்பவர், சேட்டுவைத் தட்டிக்கேட்டு சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோனிஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்றார்.

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மோனிஷை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், அங்கிருந்து தப்பியோட முயன்ற சேட்டுவை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த திரு.வி.க. நகர் போலீசார், சேட்டுவைக் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில், பெண்ணின் வருங்கால மருமகனே கத்திக்குத்துக்கு ஆளான நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Gayathri

Recent Posts

மாணவியை ரம்பத்தால் அறுத்த விவகாரம்…! குற்றவாளியின் வலது கால் அகற்றம்… திசுக்கள் அழுகி கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் புகுந்து 10-ஆம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளி ஹேமந்தின் வலது…

6 minutes ago

முதல்வர் விஜய்க்கு செக்…! “ஸ்டாலின் + சீமான் + இபிஎஸ் மெகா கூட்டணி சாத்தியமா…?” எதிர்கட்சிகளின் மாஸ்டர் பிளான்… சூடுபிடிக்கும் இடைதேர்தல் களம்…!!

தமிழகத்தில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால்…

30 minutes ago

“முதலமைச்சர் விஜய் வாகனம் முன் பாய்ந்த தொண்டர்…” அடுத்த நொடியே சுதாரித்து சைகை காட்டிய முதல்வர்… பெருந்துறையில் திடுக்கிடும் தருணம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் வாகனம் முன்பாகத் தொண்டர் ஒருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்த…

35 minutes ago

“ரிலையன்ஸ் பங்குகள் ராக்கெட் வேகம்…” ஒரே நாளில் ரூ.80,000 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி… ஆசியாவின் முதல் பணக்காரராக மீண்டும் மகுடம்…!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் கண்ட பிரம்மாண்ட ஏற்றத்தின் மூலம் ஒரே நாளில்…

49 minutes ago

2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி பலி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த…

57 minutes ago

அதிரடி ரெய்டு..! அரசு அலுவலகத்தில் நடந்த அட்ராசிட்டி… கையும் களவுமாக மாட்டிய இன்ஜினியர்… மின்வாரியத்தில் லஞ்ச வேட்டை… அலறவிட்ட பகீர் சம்பவம்…!!

ஷம்ஷாபாத் மின்வாரிய துணை நிலையத்தில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை…

1 மணத்தியாலம் ago