தவெக நிர்வாகியுடன் கள்ளத்தொடர்பு… தனி வீடு எடுத்து குடும்பம் நடத்திய ஜோடி… மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை… உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகை…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்பவருக்கும், அவரது மனைவி அனிதாவுக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒகேனக்கல்லில் தேநீர் கடை நடத்தி வந்த சக்திக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்னைகள் இருந்த நிலையில், அனிதாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான கார்த்திக் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பலமுறை குடும்பத்தினர் எச்சரித்தும் இந்த உறவு தொடர்ந்ததோடு, அனிதா தனது கணவரை வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார். மேலும், தாலி மற்றும் மெட்டியைக் கழற்றி வைத்துவிட்டு அவருடன் சேர்ந்து வாழ திட்டவட்டமாக மறுத்ததோடு, குழந்தைகளைப் பார்க்கவும் தடை விதித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளான சக்தி, தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தனது மகனின் தற்கொலைக்குக் காரணமான மருமகள் அனிதா மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள கார்த்திக் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, சக்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது, நீதி கேட்டு மனு அளிக்க வந்த கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், தனது பையில் மண்ணெண்ணெய் கேனை மறைத்து எடுத்து வந்ததைக் கண்ட காவல்துறையினர் உடனடியாக அதனைப் பறிமுதல் செய்தனர். மனைவியின் தகாத உறவால் கணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது விரைந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.