“அன்பா பேசி வலையில் சிக்க வைத்தார்!”… காதலரின் கொடூர இரட்டை வேடம்… நடிகைக்கு நேர்ந்த கொடூரம்… மௌனம் கலைத்த அனுபமா பரமேஸ்வரன்…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்த கால காதல் உறவில் இரண்டு ஆண்டுகளாக தான் அனுபவித்த “நார்சிஸ்டிக்” கொடுமைகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். ஒரு முன்னணி நடிகரின் மகனான தனது முன்னாள் காதலர், ஆரம்பத்தில் அன்பாகப் பழகுவது போல் நடித்து படிப்படியாக அவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். தான் அணியும் உடை முதல் சமூக வலைத்தளப் பதிவுகள் வரை ஒவ்வொன்றிலும் தலையிட்டு, தன் விருப்பப்படியே அனுபமாவை இருக்கச் செய்துள்ளார். அவர் என்ன நினைப்பாரோ என்ற பயத்தில், தன்னை அறியாமலேயே தன் இயல்பை இழந்து அந்த நபருக்காகத் தன்னை மாற்றிக் கொண்டதாக அனுபமா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் அளவு கடந்த அன்பைக் கொட்டுவதும், மறுநாளே முற்றிலும் முகம் மாறி யாரோ போலக் கொடூரமாக நடந்து கொள்வதுமாக அந்த நபர் இரட்டை மனநிலையுடன் செயல்பட்டுள்ளார். வெறும் மூன்று மாதங்களிலேயே அவசரமாக நிச்சயதார்த்தம் செய்ய அந்த நபர் முயன்றபோது, இது காதலால் அல்ல, மாறாகத் தன்னை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வலை என்பதை உணர்ந்து அனுபமா சாதுரியமாக அதிலிருந்து விலகியுள்ளார். இந்த இரண்டு வருட நச்சுத்தன்மை கொண்ட உறவினால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான தான், அதிலிருந்து மீண்டு வர சுமார் ஒன்றரை வருடங்கள் சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் அனுபமா அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.