“CM விஜய்கிட்ட கேட்டு சொல்றோம்”…. தவெக சீனியர்களின் பதிலால் கடுப்பான Ex அமைச்சர்கள்…. தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் வழங்கப்படாததால், கட்சிக்குள் கடும் அதிருப்தி புகையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட தலைவர்கள் கட்சியில் சேரும்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தமது ஆதரவாளர்களிடம் குமுறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இது குறித்து தவெகவின் மூத்த நிர்வாகிகளிடம் முறையிட்டால், அவர்கள் “இதுபற்றி முதலமைச்சர் விஜய்யிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறோம்” என மழுப்பலாகப் பதிலளிப்பது, இணைந்த தலைவர்களின் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.