இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒருவர் இளையராஜா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இவரை இசை ஞானி என்று மக்கள் அன்போடு அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா.

#image_title
நாட்டுப்புற இசை கர்நாடக இசை மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர் இளையராஜா. தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன் என்பதாகும். 90களில் புகழின் உச்சியில் இருந்த இளையராஜா இன்றளவும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆக இசையமைத்து வருகிறார். இசையை எழுத்து வடிவமாக எழுதக்கூடிய திறமை படைத்தவர் இளையராஜா அவர்கள் என்பது பலருக்கும் தெரியாது.

தமிழ் சினிமாவின் அனைத்து இயக்குனர்களுடனும் அனைத்து பாடலாசிரியர் மற்றும் பாடகர்களுடன் பணியாற்றியிருக்கிறார் இளையராஜா. இந்நிலையில் 1984-ம் ஆண்டு இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘காதலின் தீபம் ஒன்று ‘ பாடலின் போது ஹெர்னியா அறுவை சிகிச்சையால் வாய்பேச முடியாமல் இருந்த இளையராஜாவுக்காக காதலின் தீபம் ஒன்று என்ற பாடலை எழுதுவதற்காக ரஜினி உள்ளிட்ட எல்லோரும் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இளையராஜா வெளியே செல்லக்கூடாது வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மருத்துவர்.

#image_title
இதனால் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இளையராஜாவை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு செல்கிறார். பார்த்ததும் ரொம்பவே சங்கடமாக இருக்கிறது நான் என்ன செய்வது இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று சொல்லி கூறுகிறார். இப்போது என்ன உங்களுக்கு பாட்டு வேணும் அவ்வளவு தானே என்கிறார் இளையராஜா. situation சொல்லுங்கள் என்றவுடன் பஞ்சு அருணாச்சலம் செல்கிறார். நான் விசில் அடிக்க உங்களால் வரிகள் எழுத முடியுமா என்று இளையராஜா கேட்டுள்ளார். என்னால் பண்ண முடியும் என்று பஞ்சு அருணாச்சலம் சொல்ல இளையராஜா டியூனை விசில் அடிக்க அடிக்க அ பஞ்சு அருணாச்சலம் அங்கேயே வரிகளை எழுதி விட்டாராம்.
