நான் ஹீரோவானதால் என்னால் அதை செய்ய முடியவில்லை… சினிமா வாழக்கைப் பற்றி பேசிய பாக்யராஜ்!

By vinoth on கார்த்திகை 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.

   

   

அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.

 

80 களில் ரஜினி, கமலுக்கு போட்டியாளராகக் கருதப்பட்ட பாக்யராஜ் இப்போது பிஸியான நடிகராக இல்லாமல் போனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்புதான். இதுபற்றி பாக்யராஜே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நானே ஹீரோவாக இருந்ததால் எனக்காகவே நான் கதை எழுத வேண்டியிருந்தது. அதனால் எனக்கு என்ன கதைகள் எல்லாம் செட்டாகுமோ அதையே நான் எழுதினேன். இதனால் என்னால் வேறுபட்ட ஜானர்களில் கதை எழுத முடியாமல் போனது. ஒரு த்ரில்லர் வகையிலோ ஆக்‌ஷன் கதையிலோ என்னால் நடிக்கமுடியவில்லை” எனக் கூறியுள்ளார்.