தமிழ் சினிமாவில் கிராமத்தை இசையை புகுத்தியவர் தான் இசையமைப்பாளர் இளையராஜா. எண்பது காலகட்டத்தில் பல திரைப்படங்களில் இவரின் இசையை நம்பி தான் உருவாகி இருந்தது. தற்போதும் 80, 90 கிட்ஸ்களுக்கு பிடித்தமான பாடல் இளையராஜாவின் இசையில் உருவானது தான். இவர் கொடுத்தது போல மெலடி பாடல்களை இதுவரை எந்த இசையமைப்பாளரும் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. இளையராஜா கோபக்காரர், திமிர் பிடித்தவர், சம்பள விஷயத்தில் கரார் பேர்வழி என திரை உலகில் அவரைப் பற்றி பல விஷயங்கள் பேசுவார்கள்.
ஆனால் பல படங்களுக்கு குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டு இளையராஜா இசையமைத்துக் கொடுத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்தான். அதிலும் ஒரு சில படங்களுக்கு சம்பளமே வாங்காமல் கூட இளையராஜா இசையமைத்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்தவர்கள் தான் பி. வாசு மற்றும் சந்தான பாரதி. இவர்கள் இருவரும் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் இயக்கிய திரைப்படம் தான் பன்னீர் புஷ்பங்கள். இந்தப் படத்தில் பாடல்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். சுமார் 5 லட்சம் பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்போது இளையராஜா ஒரு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். எனவே அவருக்கே ஒரு லட்சம் போய்விட்டால் படத்தை எப்படி எடுப்பது இளையராஜா எவ்வளவு சம்பளம் கேட்கப் போகிறார் என வாசு பயந்துகொண்டே இருந்துள்ளார். பாடல்கள் உருவானபோது, அண்ணே உங்க சம்பளம் எவ்வளவு என சொல்லுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று ராஜாவிடம் பி வாசு கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளார்.
ஆனால் இளையராஜா எதுவுமே சொல்லாமல் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்துள்ளார். இறுதியாக பின்னணி இசையும் முடிந்த பிறகு வாசு அவரிடம் மீண்டும் கேட்க, இந்தப் படத்திற்கு நான் இசையமைக்க நீ சம்பளமே கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டாராம். மேலும் முதன் முதலில் படம் எடுக்குறீங்க, எனக்கு சம்பளம் வேண்டாம், போய் ஜெயிச்சுட்டு வாங்க என்று கூறி வாழ்த்து தெரிவித்து பி வாசுவுக்கு இளையராஜா இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். இந்த தகவலை பி வாசு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…