தன் சினிமா வாழ்க்கையில் டி.ராஜேந்தர் இயக்கிய ஒரே ரீமேக் படம்.. அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்களில் ஒருவர்தான் டி. ராஜேந்தர். வெறும் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து வசந்த அழைப்புகள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த டி ராஜேந்தர் 1983 ஆம் ஆண்டு தாய் தயாரித்து இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற டி ராஜேந்தர் தொடர்ந்து தான் தயாரித்து இயக்கி அனைத்து படங்களிலும் தானே ஹீரோவாக நடித்து வந்தார். கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ள டி ராஜேந்தர் ஒரு படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் கதை மற்றும் திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்துள்ளார். 1987 ஆம் ஆண்டு வெளியான ஒரு தாயின் சபதம் திரைப்படம் டி ராஜேந்தர் ரீமேக் செய்து இயக்கிய முதலும் கடைசியுமான படமாகும். இந்தியில் அணில் கபூர் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான மெரி ஜங் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஒரு தாயின் சபதம்.

ராஜ்குமார் என்ற வழக்கறிஞர் கேரக்டரில் டி ராஜேந்தர், அவரது அம்மாவா ஸ்ரீ வித்யா நடித்திருந்த இந்த படத்தில் ஜெய்சங்கர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நடிகர் சிம்பு மற்றும் அவரது சகோதரி இலக்கிய ஆகியோர் இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனமாடி இருப்பார்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற எனது கானம், சொல்லாம தானே இந்த மனசு தவிக்குது, ராக்கோழி கூவையில, அட பொன்னான மனசே உள்ளிட்ட பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக உள்ளது. இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் டி ராஜேந்தர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago