தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. எண்பதுகளில் பல திரைப்படங்கள் ஓடியதற்கு முக்கிய காரணம் இவருடைய இசை தான். இயக்குனர்கள் தங்களுடைய படம் வெற்றி அடைய தங்களை 50% நம்பினால் மீதமுள்ள 50% இளையராஜாவை தான் நம்புவார்கள். இசைஞானி இளையராஜாவுக்கு 83 வயது. சினிமா பிரபலங்கள் பலரும் வியந்து பார்க்கும் விஷயம் என்னவென்றால் இளையராஜா என்றும் இரும்பை போல் சுறுசுறுப்பாக இசையமைக்கின்றார். ஒரு பாட்டுக்கு குறைந்தது ஐந்து நிமிடம்தான் எடுத்துக் கொள்வார். 83 வயதானாலும் படங்களுக்கு இசையமைப்பது மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது என பிசியாக உள்ளார்.
இறுதியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற தின தினமும் உன் நெனப்பு என்ற பாட்டு காதல் மயக்கத்தில் கடத்திச் சென்றது. உதாரணத்திற்கு இயக்குனர் பாரதிராஜா முதல் மரியாதை திரைப்படத்தை பற்றி பேசி இருப்பார். அதாவது இளையராஜாவிற்கு முதல் மரியாதை திரைப்படம் பிடிக்கவில்லை. ஆனால் அவருடைய பின்னணி இசை பாட்டும் சக்க போடு போட்டது. அந்த நிலாவத்தான் கையில பிடிச்ச, பூங்காற்று விரும்புமாய் என ஒவ்வொரு பாடலும் ரசிகர்களின் மனதை உலுக்கி எடுத்து விட்டது. பின்னணி இசை என்றால் அது இளையராஜா மட்டும்தான்.
பெரிய இயக்குனர்கள் பலரும் நாம் படத்தை எடுத்து விட்டோம் மிச்சத்தை இளையராஜா பார்த்துக்கொள்வார் என்று நினைத்துள்ளனர். அந்த அளவிற்கு இளையராஜா மிகப்பெரிய அர்ப்பணிப்போடு இசையை கொடுத்துள்ளார். இயக்குனர் ஒரு காட்சியில் சொல்லவரும் உணர்வுகளை ராஜா தனது பின்னணி இசை மூலம் கடத்தி விடுவார். சில படங்கள் மொக்கையாக இருந்தாலும் இவருடைய இசை ஆள் பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது. அதனைப் போல தான் நாசர் இயக்கி நடித்த அவதாரம் என்ற திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இளையராஜாவின் இசையால் அந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. இந்த படத்தில் தென்றல் வந்து தீண்டும்போது பாடல் உருவான விதத்தை நாசர் பல மேடைகளில் பேசி இருப்பார்.
ரசிகர்களுக்கும் அருமையான அனுபவமாகவும் இது இருந்தது. தயாரிப்பாளர் இல்லாமல் இந்த திரைப்படத்தை எடுத்து முடித்ததாக நாசர் தெரிவித்து இருப்பார். இளையராஜா என்றால் கண்ணீர் வந்துவிடும் என்றும் அவர் பலமுறை கூறியுள்ளார். கூத்து தொழிலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை நாசர் இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை. அதனால் தயாரிப்பாளருக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது இளையராஜாவின் பாடல்களை ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்ற நிலையில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இப்படி பல படங்கள் அஷ்டமாகி இளையராஜாவின் இசையால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது.