அந்தப் படம் அட்டகத்தி தினேஷ் பண்ண வேண்டியது தான், ஆனா.. நடிகர் குரு சோமசுந்தரம் ஓபன் டாக்..!

By Nanthini on பங்குனி 2, 2025

Spread the love

ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்தான் குரு சோமசுந்தரம். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் காரணமாக இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது. அப்படி இவர் நடித்து வெளியான திரைப்படம் தான் ஜோக்கர். இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் திரைப்படத்தில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்திய குடியரசு தலைவராக தன்னை நினைத்துக் கொள்ளும் கிராமவாசி. தனது கிராமத்தை சுற்றி நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்துகின்றார்.

ஆசியாவின் சிறந்த நடிகராக குரு சோமசுந்தரம் தேர்வு

   

ஒரு கட்டத்தில் அவருடன் இணைந்து கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் பிறகு நடக்கக்கூடிய சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிகைன்வுட்ஸ் விருது இவருக்கு கிடைத்தது. மலையாளத்தில் இவர் நடித்த மின்னல் முரளி திரைப்படத்திற்காக பல விருதுகளும் பெற்றுள்ளார். பேட்டை திரைப்படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்திருந்தார். ஜெய் பீம் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் அதிக அளவில் பேசப்பட்டது.

   

டாப் நடிகர்களுக்கே கிடைக்காத அங்கீகாரம்.. சாதித்து காட்டிய குரு சோமசுந்தரம்  - Cinemapettai

 

மல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். ஒரு சாதாரணமான நடிகராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றன. தன்னுடைய எளிமையான நடிப்பின் காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் ஒரு சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இறுதியாக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவான பாட்டில் ராதா திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மின்னல் முரளி நினைவுகளைப் பகிர்ந்த குரு சோமசுந்தரம்!

இப்படியான நிலையில் குரு சோமசுந்தரம் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  தான் நடித்த மின்னல் முரளி திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில், மின்னல் முரளி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அட்டகத்தி தினேஷ் தான். அதன்பிறகு ஒரு அசோசியேட் என்னுடைய ஜோக்கர் படத்தை போட்டு காமிச்சிருக்காங்க. இவர் காமெடியன் தானே என்று சொன்னதும் அடுத்ததாக வந்தவன் உலகம் படத்தை போட்டு காட்டி இருக்காங்க. பிறகு உடனே எனக்கு மின்னல் முரளி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று குரு சோமசுந்தரம் பேசியுள்ளார்