தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஜீவா சமீபத்தில் நடித்த பேட்டியில், கற்றது தமிழ் திரைப்படத்தை முடித்த கையோடு கோ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் கற்றது தமிழ் படத்தை பார்த்துவிட்டு கேவி ஆனந்த் சார் எனக்கு போன் பண்ணி நான் ஒரு ஸ்கிரிப்ட் வச்சிருக்கேன் உங்க கூட தான் சேர்ந்து பண்ணனும் என்று சொன்னாரு. அந்தப் படம் தான் சூர்யா நடிப்பில் வெளியான அயன்.

ஆனா அந்த சமயத்துல கோ திரைப்படத்தில் நான் கமிட் ஆகி இருந்ததால் என்னால் இந்த படம் பண்ண முடியல. சினிமாவுல நான் பார்த்து வியந்த நபர் தான் கேவி ஆனந்த். அப்படிப்பட்ட அவர் கூட அந்த படம் பண்ண முடியாம போனது எனக்கு வருத்தம் தான் என ஜீவா பேசியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சூர்யா, பிரபு மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் அயன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
