கதையே தெரியாமலே கமல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா.. ஆடிப்போன கவிஞர் கண்ணதாசன்..!

By Nanthini on பங்குனி 31, 2025

Spread the love

தனது இசையால் பலரையும் கட்டி போட்டவன் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய இசைக்கி மயங்காதவர்கள் யாருமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்னும் இசையின் மூலமாக ராஜாங்கம் நடந்ததி கொண்டிருக்கிறார். இவரின் முதல் படத்திலிருந்து இவருடைய பாடல்கள் சரித்திரமாக தொடங்கி விட்டது. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலின் ஹம்மிங் மனதிற்குள் புகுந்து மனதை கரைத்து விடும். இப்படி அடுத்தடுத்த படத்திற்கு இசையமைத்து அனைவரையும் கட்டுப்போட்ட இளையராஜா இதுவரை 1500 க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா: அன்னக்கிளி முதல் சிம்ஃபொனி வரை இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணம் -  ஒரு மீள்பார்வை - BBC News தமிழ்

   

என்னதான் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு பாடல்கள் வந்தாலும் இளையராஜாவின் பாட்டுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு எப்போதுமே உள்ளது. சமீபத்தில் கூட லண்டனில் தன்னுடைய முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இளையராஜா இன்றும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இப்படியான நிலையில் இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கமலின் ராஜபார்வை திரைப்படத்திற்கு இசையமைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

   

Ilaiyaraaja shares kamalhaasan crying while Raaja Paarvai movie preparation  | மரத்தை கட்டிப்பிடித்து அழுதோம்...ராஜபார்வை பட அனுபவங்களை பகிர்ந்த இளையராஜா  கமல்

 

அதில், ராஜ பார்வை படம் ஆரம்பிக்கப் போறாங்க கம்போசிங் வாங்க என்று கூப்பிட்டாங்க. நானும் போயிட்டேன். அங்க போனதும் டைரக்டர் சீனிவாச ராவ் ஏதாவது ஒரு டியூன் போடுங்க முதலில் ஒரு டூயட் பாட்டு ரெடி பண்ணிடலாம் என்று சொன்னாரு. உடனே அவங்க சொன்ன மாதிரி நான் மியூசிக் போட்டதும் உடனே கவிஞருக்கு போன் பண்ணி பாட்டு எழுத வர சொன்னோம். உடனே கவிஞர் வந்ததும் என்ன சிச்சுவேஷன் என்று சொல்லுங்க என்று கேட்டார்.

கண்ணதாசன் - இளையராஜா கூட்டணியில் மெகாஹிட் பாடல்... நடிப்பில் சொதப்பிய நடிகை  : எந்த பாடல் தெரியுமா?

சார் உண்மையான சிச்சுவேஷன் என்னவென்றால் நாளைக்கு படத்தின் பூஜை நடக்கப் போகுது இன்னைக்கு நாம ஒரு டூயட் சாங் ரெடி பண்ணியே ஆகணும் ஆனா இன்னும் படத்துக்கு கதை மட்டும் ரெடி ஆகலை என்று சீனிவாச ராவ் சொன்னாரு. அதைக் கேட்டதும் கவிஞர் சிரிச்சிட்டாரு. அதன் பிறகு என்ன டியூன் போட்டு இருக்க என்று எங்கிட்ட கேட்டதும் டூயட் மாதிரி கேட்டாங்க அதனால ஒரு மியூசிக் போட்டு இருக்கேன் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் கவிஞர் கண்ணதாசன் எழுதுன பாட்டு தான் அழகே அழகு தேவதை என்ற பாட்டு என்று இளையராஜா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.