Connect with us

இளையராஜா வேண்டாம் என நிராகரித்த பாடல்களை தேர்வு செய்த இயக்குனர்… ரிசல்ட் என்ன தெரியுமா?

CINEMA

இளையராஜா வேண்டாம் என நிராகரித்த பாடல்களை தேர்வு செய்த இயக்குனர்… ரிசல்ட் என்ன தெரியுமா?

சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

   

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. ரஹ்மானின் வரவால் மணிரத்னம், ஷங்கர், கதிர் போன்ற முக்கியமான இயக்குனர்கள் அவர் பக்கம் செல்ல ஆரம்பித்தனர்.

   

ஆனாலும் இளையராஜா தன் ஸ்டைலில் தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்துதான் வந்தார். அப்படி அவரின் அனைத்துப் பாடல்களும் ஹிட்டான படம்தான் ரஜினி நடித்த ‘எஜமான்’ திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் ஆர் வி உதயகுமார், பாடல் கம்போசிங்குக்காக இளையராஜாவைப் பார்க்க சென்றுள்ளார்.

 

ஆனால் அன்று இளையராஜா தனக்கு மூட் சரியில்லை என்று நாளைக்கு கம்போசிங் வைத்துக் கொள்ளலாம் என சொல்லியுள்ளார். ஆனால் உதயகுமாரோ மறுநாள் பாடல் ரெக்கார்ட் செய்யப்படவேண்டும் என்பதால் இளையராஜா வேண்டாம் என நிராகரித்த் ட்யூன்கள் எதாவது இருக்கிறதா என அவரின் உதவியாளர்களிடம் கேட்டுள்ளார். அப்படி இருந்த சில ட்யூன்களைக் கேட்டு அதில் இருந்து இரண்டு ட்யூன்களை தேர்வு செய்தாராம்.

அப்படி அவர் தேர்வு செய்த ட்யூன்கள்தான் ‘ஒருநாளும் எனை மறவாத’ மற்றும் ‘நிலவே முகம் காட்டு’ ஆகிய பாடல்கள். அந்த இரண்டு பாடல்களும் இன்றளவும் திரும்ப திரும்ப கேட்கப்படும் ஹிட்ஸ்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More in CINEMA

To Top