Connect with us

ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர்.. இவரது மனைவி இந்த பிரபல நடிகையா..? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!!

CINEMA

ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகர்.. இவரது மனைவி இந்த பிரபல நடிகையா..? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இப்போது ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதிஹாசன் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

   

இந்த நிலையில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உபேந்திரா குறித்த கூடுதல் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . தமிழில் பல்வேறு படங்களில் நடித்த நடிகை பிரியங்கா திரிவேதியின் கணவர் தான் உபேந்திரா என்ற தகவல் வெளியாகி உள்ளது.

   

 

கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜ்யம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியங்கா திரிவேதி அறிமுகமானார். விஜயகாந்தின் தம்பியாக பிரபல மலையாள நடிகர் மனோஜ் குமார் நடித்தார். அவரது காதலியாக பிரியங்கா நடித்திருப்பார். இவரது பூர்வீகம் கொல்கத்தா. பிரியங்கா திரிவேதி ஹிந்தி, ஒரிசா, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் இணைந்து ராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அஜித்தும் பிரியங்கா திரிவேதியும் வரும் காட்சிகள் ரசிகர்களின் மனதை கவரும் விதமாக இருக்கும். கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ரிலீசான காதல் சடுகுடு திரைப்படத்திலும் பிரியங்கா திரிவேதி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஐஸ், ஜனனம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் மட்டுமே பிரியங்கா நடித்துள்ளார். கன்னடா சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை பிரியங்கா திரிவேதி 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

#image_title

author avatar
Priya Ram

More in CINEMA

To Top