Connect with us

‘தப்பு பண்ணிட்டேன்யா… இயக்குனர் ஷங்கர் எனக்குப் போன் பண்ணி மன்னிப்புக் கேட்டார்’ – பாண்டிராஜ் பகிர்ந்த தகவல்!

CINEMA

‘தப்பு பண்ணிட்டேன்யா… இயக்குனர் ஷங்கர் எனக்குப் போன் பண்ணி மன்னிப்புக் கேட்டார்’ – பாண்டிராஜ் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.

அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

   

ஷங்கர் இயக்கும் படங்கள் எல்லாம் மாஸ் மசாலா படங்களாக இருந்தாலும், அவர் தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்தவை எல்லாம் நல்ல கதையம்சம் கொண்ட எதார்த்த பாணியிலான படங்களாகும். பாலாஜி சக்திவேலின் ‘காதல்’, வசந்தபாலனின் ‘வெயில்’ மற்று சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ ஆகிய படங்களை சொல்லலாம்.

   

அப்படிதான் அவர் இயக்குனர் பாண்டிராஜ் எழுதி இயக்கிய ’பசங்க’ திரைப்படத்தையும் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது. அந்த கதையைப் பலமுறை கேட்ட ஷங்கர், முதலில் ரசித்தாலும் பின்னர் அந்த கதையில் ஏதோ பிரச்சனை இருப்பதாக சொன்னாராம். அதனால் அந்த படத்தைத் தயாரிப்பதை தள்ளிப் போட்டுள்ளார்.

 

அதன் பிறகு சசிகுமார் தயாரிப்பில் பசங்க திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. அப்போது இயக்குனர் ஷங்கர், பாண்டிராஜுக்கு போன் செய்து “என்ன மன்னிச்சுடுய்யா… நான் உன் கதையை சரியாகக் கணிக்கலை” எனக் கூறியுள்ளார். இதை இயக்குனர் பாண்டிராஜ்  சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

 

More in CINEMA

To Top