CINEMA
“கேப்டனுடன் நடிக்க மாட்டேன்”.. அப்போவே விடாபிடியாக நின்ற ராமராஜன்.. அவரே கூறிய தகவல்..!!
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். கடந்த 1985-ஆம் ஆண்டு ரிலீசான மண்ணுக்கேத்த பொண்ணு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். சுமார் நான்கு படங்களை ராமராஜன் இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. முதன் முதலில் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் நடிகராக நடித்தார் இந்த படத்தை அழகப்பன் இயக்கினார். ரேகா ராமராஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ராமராஜன் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
கிராம பகுதிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக ராமராஜன் மாறினார். முக்கியமாக ராமராஜன் நடிப்பில் ரிலீசான கரகாட்டக்காரன் திரைப்படம் மக்களுடைய அமோக வரவேற்பை பெற்றது. 1986-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் ராமராஜன் சினிமா வாழ்க்கையில் கொடிகட்டி பறந்தார். அதன் பிறகு அரசியலில் நுழைந்தது, நளினியை விவாகரத்து செய்தது, விபத்து சிக்கியது என பல்வேறு காரணங்களால் அவரது மார்க்கெட் சரிந்தது.
கடைசியாக ராமராஜன் நடிப்பில் சாமானியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் ராமராஜன் கலந்து கொண்டார். அப்போது விஜயகாந்த் உடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது எனது குருநாதர் அழகப்பன் தான். அவர் அடுத்ததாக பூமழை பொழியுது படத்தை இயக்க ரெடியாக இருந்தார். அவர் என்னிடம் சிங்கப்பூர் போகணும் கிளம்பு எனக்கு கூறினார்.
மேலும் அந்த படத்தில் விஜயகாந்த், நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினார். உடனே நான் செகண்ட் ஹீரோ என்பது எனக்கு தெரிந்தது. நீங்கள் தான் என்னை ஹீரோ ஆக்குனீர்கள். இப்போது செகண்ட் ஹீரோவாக என்னை நடிக்க சொல்கிறீர்கள். அப்படி நடிக்க மாட்டேன் என கூறினேன். இதனை எடுத்து சில காலம் கழித்து மீண்டும் விஜயகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அந்த காலகட்டத்தில் விஜயகாந்த் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். அப்போதும் செகண்ட் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதனை மறுத்து விட்டேன் என கூறியுள்ளார்.